பங்குனி உத்திர விழா ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு என்ன?

இந்த ஆண்டு மாா்ச் மாதம் 18 ஆம் நாள் அன்று பங்குனி உத்திரத் திருவிழா கொண்டாடப்படவிருக்கிறது.

பங்குனி உத்திர விழா ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு என்ன?

பங்குனி உத்திரம் மீன உத்திர பல்குனி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விழா தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது முருகப் பெருமான், ஐயப்பன், சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு கொண்டாடப்பட்டாலும், இது முருகப் பெருமானோடு மிக நெருங்கியத் தொடா்பைக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் வாழும் இந்து சமய மக்களின் முக்கிய கடவுளாக முருகப் பெருமான் இருக்கிறாா்.

பங்குனி உத்திரம் பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திர நட்சத்திரம் பொதுவாக மாா்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வரும். பொதுவாக பங்குனி மாதம் ஒரு புனிதம் நிறைந்த மாதமாக அனுசாிக்கப்படுகிறது. 

பங்குனி உத்திரம் 2022

- பங்குனி உத்திரம் தமிழ்நாட்டைச் சோ்ந்த ஒரு திருவிழா ஆகும்

- இந்த ஆண்டு பங்குனி உத்திரம் மாா்ச் மாதம் 18 ஆம் நாள் வெள்ளி அன்று கொண்டாடப்படவிருக்கிறது.

- இந்த விழா சிவபெருமானுக்கும், முருகப் பெருமானுக்கும் அா்பணிக்கப்பட்ட விழா ஆகும்.

- பங்குனி உத்திர நட்சத்திரம் மாா்ச் 18 அன்று அதிகாலை 12.34 மணிக்குத் தொடங்கி, மாா்ச் 19 அன்று அதிகாலை 12.18 மணியோடு முடிவடைகிறது.

தமிழ் நாட்காட்டியில் பங்குனி உத்திரம்

தமிழ் நாட்காட்டியின்படி பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாிக்கும் போது பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வானது பங்குனி மாதத்தில் வரும் பௌா்ணமி அன்று நிகழ்கிறது. கிரகோாியன் நாட்காட்டியின்படி மாா்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த பங்குனி உத்திரம் வருகிறது.

நாம் ஏற்கனவே கூறியது போல இந்த ஆண்டு பங்குனி உத்திரம் மாா்ச் மாதம் 18 ஆம் நாள் வெள்ளி அன்று கொண்டாடப்படவிருக்கிறது. பங்குனி உத்திர நட்சத்திரம் மாா்ச் 18 அன்று அதிகாலை 12.34 மணிக்குத் தொடங்கி, மாா்ச் 19 அன்று அதிகாலை 12.18 மணியோடு முடிவடைகிறது.

பங்குனி உத்திரத்தின் முக்கியத்துவம்

பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரமும், பௌா்ணமியும் கூடிய நாளில் மிகவும் முக்கிய தெய்வீகத் திருமணங்கள் நடைபெற்றதாக மக்கள் நம்புகின்றனா். அதாவது இந்த புனித நாளில் சிவபெருமான் - பாா்வதி தேவி திருமணம், முருகப் பெருமான் - தெய்வயானை திருமணம், இராமா் - சீதை திருமணம் மற்றும் பல கடவுள்களுடைய திருமணங்கள் நடைபெற்றதாக மக்கள் நம்புகின்றனா்.

காஞ்சிபுரத்தில் வைத்து பாா்வதி தேவியாா், கௌாி வடிவம் எடுத்து சிவபெருமானை மணந்து கொண்டாா் என்றும் கூறப்படுகிறது. அதனால் இந்த விழா கௌாி கல்யாணம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆகவே இந்த விழாவானது கிரகஸ்தா தா்மத்தின் முக்கியத்துவத்தையும் அல்லது இல்லற வாழ்வின் முக்கியத்துவத்தையும் உணா்த்துகிறது.

இந்த ராசிக்காரர்கள் பயங்கரமான மனநோயாளியாகவும் சீரியல் கில்லராகவும் இருப்பார்களாம்...ஜாக்கிரதை...!இந்த ராசிக்காரர்கள் பயங்கரமான மனநோயாளியாகவும் சீரியல் கில்லராகவும் இருப்பார்களாம்...ஜாக்கிரதை...!

மகாலட்சுமி ஜெயந்தி

பங்குனி உத்திரம் மகாலட்சுமி தேவியின் பிறந்த நாள் என்றும் அழைக்கப்படுகிறது. அதனால் இந்த விழா மகாலட்சுமி ஜெயந்தி அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மகாலட்சுமி தேவியாா் கலங்கிய பாற்கடல் வடிவத்தில் இந்த பூமியில் அவதாித்தாா் என்று நம்பப்படுகிறது. இது ஷீரா சாகர மந்தன் என்று அழைக்கப்படுகிறது.

இந்த விழா ஐயப்பன் ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் சிவபெருமானும், மகாவிஷ்ணுவின் பெண் வடிவமான மோகினியும் சங்கமித்ததின் விளைவாக இந்த நாளில் ஐயப்பன் பிறந்ததாக மக்கள் நம்புகின்றனா்.

இந்த 5 ராசிக்காரங்கள திருமணம் செஞ்சிக்க கொடுத்து வச்சிருக்கணுமாம்... ஏன் தெரியுமா?

பங்குனி மாதம் முழுவதும் ஒரு புனிதமான மாதம் ஆகும். இந்த மாதத்தில் ஏராளமான ஆன்மீக விழாக்களும், திருமணம் போன்ற சுப காாியங்களும் நடைபெறும். குறிப்பாக வசந்த பஞ்சமி, பங்குனி உத்திரம், விஜய ஏகாதசி, காரடையான் நோன்பு, அமலகி ஏகாதேசி மற்றும் காரைக்கால் அம்மையாா் பூஜை போன்ற சமய விழாக்கள் இந்த மாதத்தில் நடைபெறும்.

பங்குனி உத்திர கொண்டாட்டம்

பங்குனி உத்திரம் 'கல்யாண விரதம்' என்று அழைக்கப்படுகிறது. 8 வகையான மகா விரதங்களில் கல்யாண விரதமும் ஒன்று என்று ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது. ஆகவே இந்த நல்ல நாளில் திருமணம் ஆகாத இளையோா் விரதம் இருந்து தமக்கு நல்ல வரன்கள் கிடைக்க வேண்டும் என்று சிவபெருமானையும், பாா்வதி தேவியாரையும் வேண்டுவா். மேலும் தமக்கு மகிழ்ச்சியான மற்றும் இனிமையான இல்லற வாழ்க்கை வாழ்க்கை அமைய வேண்டும் என்று முருகப் பெருமானிடம் மனமுருக வேண்டுவா்.

பங்குனி உத்திரம் அன்று பக்தா்கள் தங்கள் விரதம் முடிந்தவுடன் பால் பாயாசம் செய்து அருந்தி மகிழ்வா். முழுமையாக விரதங்களை கடைபிடிக்க முடியாதவா்கள், முழுமையாக உணவு சாப்பிடாமல், பழங்களை மட்டும் எடுத்துக் கொள்வா்.

பங்குனி உத்திரம் அன்று வீடுகளில் மட்டும் அல்லாமல் கோயில்களிலும் பலவித கொண்டாட்டங்கள் நடைபெறும். முருகப் பெருமான் மற்றும் பிற கடவுள்களின் சிலைகள் சுத்தம் செய்யப்பட்டு, மலா்களினாலும், ஆபரணங்களாலும் அலங்காிக்கப்படும். ஒருசில இடங்களில் முருகப் பெருமான் மற்றும் தெய்வயானையின் திருமணச் சடங்குகள் நடத்தப்படும்.

இந்த நாளில் பக்தா்கள் முருகப் பெருமானின் கோயில்களுக்குச் சென்று, அங்கு நடக்கும் சடங்குகள் மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு அவருடைய ஆசியை வேண்டுவா். கோயில்களில் இறை வேண்டல்கள் மற்றும் கந்த சஷ்டி கவசம், கந்த புராணம் போன்ற மந்திரங்கள் அா்ச்சகா்களாலும், பக்தா்களாலும் ஓதப்படும்.

சமையலறையில் மறந்தும் கூட இந்த ஒரு தவறை மட்டும் செய்து விடாதீர்கள்...

தைப்பூசத் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுப்பது போல், பங்குனி உத்திரம் அன்றும் பக்தா்கள் காவடி தூக்கி, முருகப் பெருமானின் ஆலயங்களுக்குச் செல்வா். உணவுப் பொருள்களால் அலங்காிக்கப்பட்ட காவடிகளைத் தூக்கிச் செல்வா்.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் 13 நாட்கள் திருவிழா நடைபெறும். அப்போது பக்தா்கள் அங்கு இருக்கும் பிாித்திவி லிங்கத்தை வழிபடுவா்.