ஏப்ரல் 8 வரை இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்... உஷார்..

புதன் கும்ப ராசியில் அஸ்தமனமாகி இருக்கும் போது 12 ராசிகளும் பாதிக்கப்பட்டிருந்தாலும், 4 ராசிக்காரர்கள் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

ஏப்ரல் 8 வரை இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்... உஷார்..

ஜோதிடத்தில் கிரகங்களின் அஸ்தமனம் மற்றும் உதயம் போன்றவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதிலும் புதன் நவகிரகங்களில் சிறப்பான நிலையில் இருப்பவர். பொதுவாக கிரகங்கள் அஸ்தமனமாகும் போது அசுப பலன்களையே பெறக்கூடும். 

ஆகவே புதன் கும்ப ராசியில் அஸ்தமனமாகி இருக்கும் போது 12 ராசிகளும் பாதிக்கப்பட்டிருந்தாலும், 4 ராசிக்காரர்கள் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

ரிஷபம் - புதன் அஸ்தமன காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் மனதை அமைதிப்படுத்த முயற்சிக்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் பணியில் சில மாற்றங்களைக் காணலாம். நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கை சற்று வேதனையாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடுங்கள். இல்லாவிட்டால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் வெளியாட்கள் யாரையும் நம்பாதீர்கள்.

கடகம் - கடக ராசிக்காரர்களே! புதன் அஸ்தமனத்தால் உங்கள் தன்னம்பிக்கை குறையும். தேவையற்ற கோபத்தைத் தவிர்த்திடுங்கள். பணியிடத்தில் வெளியாட்கள் யாரையும் நம்பாதீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். சுயமாக நடந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பண பரிவர்த்தனைகளை செய்யாதீர்கள். முதலீடு செய்வதற்கு இது சாதகமான காலம் அல்ல. ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

துலாம் - துலாம் ராசிக்காரர்கள் இக்காலத்தில் சற்று மன சஞ்சலத்துடன் இருப்பார்கள். குடும்ப பொறுப்புக்கள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். கொடுக்கல் வாங்கல்களுக்கு இக்காலம் சாதகமானது அல்ல. பண இழப்பு ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள்.

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களே! புதன் அஸ்தமனத்தால் அதிருப்தியான தருணங்களை சந்திப்பீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருங்கள். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம்.

மனதில் விரக்தி மற்றும் அதிருப்தி உணர்வுகள் நிறைந்திருக்கும். சில சிரமங்களை சந்திக்கக்கூடும். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் பொறுமையாக இருங்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.