மாட்டு வண்டியில் பயணித்த பிரதேசசபை உறுப்பினர்கள்
மாட்டு வண்டி, பிரதேசசபை உறுப்பினர்கள், கரைதுறைப்பற்று

நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, பொருட்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று (10) மாட்டு வண்டியில் பிரதேச சபைக்கு சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டியில் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பிரதேச சபை நோக்கி நகர்ந்து சென்றனர்.
கரைதுறைப்பற்று பிரதேச சபை மாதாந்த அமர்வு இன்று இடம்பெறவுள்ள நிலையில் மாதாந்த அமர்வுக்கு மாட்டு வண்டியில் சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.