எரிபொருள் விலையை உயர்த்தியது லங்கா ஐ.ஓ.சி
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 177 ரூபாயாகும்.
அத்துடன், 95 ரக ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 23 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 210 ரூபாயாகும்.
அதேநேரம், டீசல் 07 ரூபாயால் அதிரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் விலை 121 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சுப்பர் டீசல் லீற்றர் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 159 ரூபாவாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW |