கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நாளை ஆரம்பம்

இந்தியாவுக்கும் - இலங்கைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள தகச்சதீவு, ராமேஸ்வரம் தீவில் இருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நாளை ஆரம்பம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய  திருவிழா

இந்தியாவுக்கும் - இலங்கைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள தகச்சதீவு, ராமேஸ்வரம் தீவில் இருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்த கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில், இந்தியா - இலங்கை நாட்டை சேர்ந்த மக்கள் திரளாக வந்து ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் திருவிழா நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (3 ) மற்றும் நாளை மறுநாள் (4) தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்தியாவில் இருந்து 2,408 பேர் பங்கேற்க உள்ளனர்.

இலங்கை பக்தர்கள்

யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான மார்ச் 3 ஆம் திகதி இரவு உணவு, மார்ச் 4 ஆம் திகதி காலை உணவு மற்றும் மீள் பயணத்திற்கான சிற்றுண்டி என்பன வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

இந்திய பக்தர்கள்

இதனிடையே கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்காக இந்திய மத்திய அரசு சார்பில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு, குடிநீர், மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கச்சதீவு வருவோர் மதுபானங்களை எடுத்து வரவோ, மது அருந்தி விட்டு வரவவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும், புகைப்பிடிக்கவோ, பிளாஸ்டிக் போன்ற பாலித்தீன் பைகளை கொண்டு வர அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.