யாழ். பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்திய விமானம்

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ். பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்திய விமானம்

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி இன்று (12) சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதற்கமைய சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே வாரந்தோறும் நான்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

இதேவேளை 2019 ஒக்டோபர் மாதம் பலாலி விமான நிலையம் நல்லாட்சி அரசாங்கத்தினால் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.