இன்றைய ராசிபலன் (05 அக்டோபர் 2022) - Indraya Rasi Palan

இன்றைய ராசிபலன் – 05 அக்டோபர் 2022 (Today Rasi Palan) - மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன் (05 அக்டோபர் 2022) - Indraya Rasi Palan

மேஷம்

ஆன்லைன் வர்த்தகங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். எந்த வகையில் யாவது தொழிலை முன்னேற்றமடைய செய்வீர்கள். வியாபாரத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவீர்கள். உறுதியான செயல் திறனால் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வீடு கட்டுவதற்கான திட்டம் தீட்டி பணம் திரட்ட முயல்வீர்கள்.

ரிஷபம்

தடைபட்டு நின்ற திருமண பேச்சு வார்த்தைகளை திறம்பட முடிப்பீர்கள். இல்லத்தரசிகளின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் படிப்புக்காக அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் புதிய முதலீடுகளை பெறுவீர்கள். வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் எதிர்பாராத லாபம் அடைவீர்கள்.

மிதுனம்

எந்த செயலிலும் முந்தி நிற்காதீர்கள். தேவையில்லாத சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டிய நிலை உருவாகும். கொடுத்த இடங்களில் பணவரவு தாமதமாகும். எடுத்த காரியத்தில் ஏதாவது ஒரு இடையூறு ஏற்படும். வியாபாரம் மந்தமாக நடக்கும். தொழில் துறையில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். இன்று சந்திராஷ்டம நாள் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

கடகம்

சாதுரியமாக பேசி சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் நம்பி இறங்கலாம். கமிஷன் வியாபாரம் நல்ல பலனை கொடுக்கும். கணவன் மனைவி உறவு கலகலப்பாக இருக்கும். பார்ட்னர்களுக்கு இடையே பரஸ்பர நம்பிக்கை அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து தக்க சமயத்தில் உதவி கிடைக்கும்.

சிம்மம்

நீண்ட தூர பயணங்களின் போது வாகனங்களில் பழுது ஏற்படலாம். உங்கள் மன நிம்மதியை கெடுக்க உறவினர்கள் முனைப்போடு இருப்பார்கள். தொழிலுக்கு திடீரென்று எதிர்ப்பு தோன்றும். நம்பிய நண்பர்களே சில நேரம் ஏறுக்கு மாறாக நடப்பார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்காது. வியாபாரப் போட்டி தடுமாற வைக்கும்.

கன்னி

பண பற்றாக்குறையால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவீர்கள். அலைச்சல் அதிகமானாலும் வெளியூர் பயணங்களால் அதிக பயன் இருக்காது. கை பொருளை பத்திரமாக வைத்திருங்கள். வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். கண்ட இடத்தில் சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உறவினர்களிடம் அளந்து பேசுங்கள். எதிர்பார்த்த பண வரவு கிடைக்காது.

துலாம்

மரியாதைக்குரிய நபரின் நட்பு கிடைக்கும். அவர் மூலமாக அரசாங்க வேலைகள் அனுகூலமாக நடக்கும். வியாபாரம் மிகுந்த லாபத்தை கொடுக்கும். தொழில் துறைகளில் இருந்த இடையூறுகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.

விருச்சிகம்

முட்டுக்கட்டைகளை தாண்டி தொழிலை விரிவுப்படுத்துவீர்கள். சகோதர உறவுகளால் சச்சரவு உண்டாகும். ஏற்கனவே இருந்த சொத்து பிரச்சனையில் இழுபறியான நிலை நீடிக்கும். தொழிலில் தைரியமாக முதலீடு செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்க தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பேச்சுவார்த்தைகள் மூலம் புதிய ஆர்டர்களை பெறுவீர்கள்.

தனுசு

வாக்கு வன்மையால் குடும்ப சிக்கலை தீர்ப்பீர்கள். கூட்டுத் தொழிலுக்கான பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். வெளிநாடு போவதற்கான ஏற்பாடு செய்வீர்கள். உறவினரிடம் அணுக்கமாக நடந்து கொள்வீர்கள். விட்டுப் போன நட்பை புதுப்பித்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள். கணவன் மனைவி உறவு களிப்பு மிக்கதாக இருக்கும்.

மகரம்

எவ்வளவுதான் சிக்கனமாக இருந்தாலும் செலவுகள் கைமீறி போகும். அடுத்தவருக்காக கடன்பட்டு அவஸ்தை படுவீர்கள். வியாபாரத்தில் மந்தமான போக்கை காணப்படும். ஆன்லைன் வர்த்தகங்கள் சாதகமாக அமையாது. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வந்து மன நிம்மதி கெடும். ஊழியர் பற்றாக்குறையால் உற்பத்தி பாதிக்கும். பணப்பற்றாக்குறை உண்டாகும்.

கும்பம்

தேவையில்லாத அலைச்சல் வந்து சிரமப்படுத்தும். கையில் இருக்கும் காசு கரைந்து போகும். நிலம் வாங்கி விற்கும் தொழில் சாதகமாக இருக்காது. போட்டி பந்தயங்களில் ஈடுபடாதீர்கள். ஆன்லைன் சூதாட்டத்தின் பக்கம் தலை வைக்காதீர்கள். அரசு வேலையில் பைல்களை கவனமாக கையாளுங்கள். தனியார் துறை ஊழியர்கள் பணிவாக நடந்து கொள்ளுங்கள்.

மீனம்

நீண்ட காலமாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். வேலை செய்யும் இடங்களில் முதலாளியின் பாராட்டு வெகுமதியாக அமையும். வியாபாரத்தில் லாபம் அதிகரித்து கையிருப்பு கூடும். தொழிலில் காட்டும் சுறுசுறுப்பு மற்றவர்களை வியந்து பார்க்க வைக்கும். குடும்பத்திற்கு தேவையான சாமான்களை வாங்குவீர்கள். பண வரவால் வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.