சஜித்துக்கு ஆதரவளிக்க தயாராகும்  சுதந்திரக் கட்சி, சுயாதீன அணி 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மாத்திரமே, சஜித் பிரேமதாஸ பிரதமர் பதவியை ஏற்பாரென நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சஜித்துக்கு ஆதரவளிக்க தயாராகும்  சுதந்திரக் கட்சி, சுயாதீன அணி 

பிரதமராக  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பதவியேற்கத் தயாராக இருந்தால், அவருக்கு ஆதரவளிக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் அணியும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மாத்திரமே, சஜித் பிரேமதாஸ பிரதமர் பதவியை ஏற்பாரென நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(11) இடம்பெற்ற ஊடகசந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.