வார்னே இறந்தது எப்படி? நடந்தது என்ன? அருகில் இருந்த நண்பர் கண்ணீர் விளக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னே உயிரிழந்தது எப்படி என்பது குறித்து அவரது நண்பர் கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளார்.

வார்னே இறந்தது எப்படி? நடந்தது என்ன? அருகில் இருந்த நண்பர் கண்ணீர் விளக்கம்

வார்னே உயிரிழந்த செய்தி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வார்னே இப்படி தான் உயிரிழந்தார் என பலரும் பலர் விதமாக கூறி வருகின்றனர்.

ஆனால் வார்னே உயிரிழந்தது எப்படி ? தாய்லாந்தில் நடந்தது என்ன என்பது குறித்து, அருகில் இருந்த நண்பர் போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளார்.

வார்னே மற்றும் அவரது 3 நண்பர்கள் தாய்லாந்துக்கு இன்ப சுற்றுலா வந்துள்ளனர். அப்போது, பகலில் வார்னே நண்பர்களுடன் ஊர் சுற்றிவிட்டு, மாலை நேரத்தில் ஓய்வு எடுப்பதற்காக அவர்களது விடுதிக்கு சென்றுள்ளனர். இரவு நேர உணவுக்காக வார்னேவின் நண்பர்கள் காத்திருந்துள்ளனர்.

வெகு நேரமாகியும் வார்னே மட்டும் அவரது அறையிலிருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது நண்பர் அறைக்கு உள்ளே சென்று பார்த்த போது வார்னே படுக்கையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

மருத்துவர்கள் வருவதற்குள் அவரது நண்பரே சிபிஆர் என்னும் முதலுதவி சிகிச்சையை 10 நிமிடத்திற்கு தொடர்ந்து அளித்துள்ளார். (அவ்வாறு செய்தால் நின்று போன இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க முடியும்.) இதனையடுத்து அங்கு வந்த மருத்துவர்கள் வார்னேவுக்கு 5 நிமிடம் சிபிஆர் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் எவ்வித அசைவும் தெரியவில்லை.

இதனையடுத்து வார்னே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வார்னே உயிரிழப்பில் எவ்வித மர்மும் இல்லை என்று தெரிகிறது.

வார்னேவின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு கொஞ்சம் தனிமையை வழங்கும் படி கேட்டுள்ளனர். இதனால் நாம் எந்த யூகங்களுக்கும் இடம் தராமல், இருப்போம் என்று தாய்லாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.