பொடுகு தொல்யைால் முடி அரிப்பா?  தடுப்பதற்கு இலகுவான வழி!

Home Remedies To Curb Dandruff In Tamil :  பொடுகு தொல்லைக்கு தீர்வு - பொதுவாக நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு முக்கியப்பிரச்சினை தான் பொடுகு. இது ஒரு வகையான பூஞ்சை தொற்றாகும். இது உச்சந்தலையை சேதப்படுத்தும் மற்றும் முடி உதிர்வையும் ஏற்படுத்தும்.

பொடுகு தொல்யைால் முடி அரிப்பா?  தடுப்பதற்கு இலகுவான வழி!

Home Remedies To Curb Dandruff In Tamil :  பொடுகு தொல்லைக்கு தீர்வு

பொதுவாக நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு முக்கியப்பிரச்சினை தான் பொடுகு. இது ஒரு வகையான பூஞ்சை தொற்றாகும். இது உச்சந்தலையை சேதப்படுத்தும் மற்றும் முடி உதிர்வையும் ஏற்படுத்தும்.

ஒழுங்கற்ற முடி பராமரிப்பு மற்றும் முடி கழுவுதல், மன அழுத்தம், பார்கின்சன், தவறான ஷாம்பு அல்லது ஷாம்பூவைப் பயன்படுத்தாததால் கூட ஏற்படலாம்.

இதனை ஆரம்பத்திலே தடுப்பது நல்லது. அந்தவகையில் பொடுகை போக்க கூடிய ஒரு சில வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.

HOW TO REMOVE DANDRUFF WITH THESE SIMPLE HOME REMEDIES

  •  2 தேக்கரண்டி சூடான தேங்காய் எண்ணெயுடன் சம அளவு எலுமிச்சை சாற்றை கலக்கவும். தலையில் மெதுவாக மசாஜ் செய்து 20 நிமிடங்களுக்கு பிறகு ஷாம்பு போட்டு முடியை அலசி வரவும்.
  • 50 மில்லி பாதாம் எண்ணெயுடன் இரண்டு துளிகள் தேயிலை மர எண்ணெயைக் கலந்து உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்பூ போட்டு முடியை அலசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  •  2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை 10-15 புதிய வேப்ப இலைகளுடன் கலக்கவும். மென்மையான கலவையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடியிலும் தடவி 30 நிமிடங்கள் விடவும். இப்போது பொடுகு எதிர்ப்பு ஷாம்பு கொண்டு கழுவவும்.
  • சுமார் 2 தேக்கரண்டி வெந்தய இலைகள் அல்லது விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அரைக்கவும். அதில் ½ தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் மற்றும் முடி மீது தடவி அரை மணி நேரம் விட்டு விடுங்கள். ஒரு நல்ல பொடுகு எதிர்ப்பு ஷாம்பூ போட்டு முடியை அலச வேண்டும். பின்னர் கண்டிஷனரைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.
  • ஒரு வாழைப்பழத்தை மசித்து, சில துளிகள் எலுமிச்சை மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து ஹேர் மாஸ்க்கை உருவாக்கவும். உச்சந்தலையில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி வருவது நல்லது.