லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை விவரங்கள் இதோ!

இன்று (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை விவரங்கள் இதோ!

இன்று (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை இன்று தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாயால் குறைக்கப்படுகிறது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,186 ரூபாய் ஆகும்.

அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 181 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1281 ரூபாயாகும்.

2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 598 ரூபாயாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW