திடீரென பற்றியெரிந்த வாகனம் - கொழும்பில் நடந்த சம்பவம்

கொழும்பு - காலி வீதியில் கல்கிஸ்ஸ பகுதியில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மகிழுந்தில் ஒரே குடும்ப உறுப்பினர்கள் பயணித்துள்ளதாகவும், அவர்கள் காரில் இருந்து குதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் கார் முற்றாக எரிந்துள்ளதுடன், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் தீயிணை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.