இந்த ஆறு அறிகுறிகள் இருந்தால் பெண்களே எச்சரிக்கையா இருங்க!
கர்ப்பப்பை கட்டி அறிகுறிகள் - Fibroid Uterus Symptoms : இன்று உலகளவில் கர்ப்பப்பை கட்டி பாதிப்புடைய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்தவகையில் கருப்பை நீர்க்கட்டிகளின் அறிகுறிகளை பார்க்கலாம்.

கர்ப்பப்பை கட்டி அறிகுறிகள் - Fibroid Uterus Symptoms
இன்று உலகளவில் கர்ப்பப்பை கட்டி பாதிப்புடைய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்தவகையில் கருப்பை நீர்க்கட்டிகளின் அறிகுறிகளை பார்க்கலாம்.
இடுப்பு பகுதிக்கு கீழே, வலது அல்லது இடது புறத்தில் வலி இருப்பது. இந்த பகுதியில் அல்லது வேறு இடத்தில் திடீரென்று பாரமாக இருப்பது போல் நீங்கள் உணரலாம். உடற்பயிற்சியின் போது அல்லது பாலியல் தொடர்பின் போது இந்த கனத்தை உங்களால் உணர முடியும்.
அடிவயிற்று வலி மற்றும் வீக்கம் என்பது வயிறில் வேறு எதோ ஒன்று உருவாவதன் காரணமாக இருக்கலாம். வயிற்று பகுதியில் மட்டும் எடை அதிகரித்து காணப்பட்டால் அல்லது உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணம் தெரியாமல் இருந்தால் அது எச்சரிக்கை மணி ஆகும்.
கருப்பை பைப்ராய்டு கட்டியைப் போல் கருப்பை நீர்க்கட்டியும் வயிறு கனமான உணர்வைத் தரும். இது மலச்சிக்கல் போன்ற உணர்வைத் தரும். இரண்டு கருப்பையிலும் கட்டிகள் உள்ளவரை, இடுப்பின் ஒரு பக்கம் மட்டுமே இத்தகைய உணர்வு தோன்றும்.
சிறுநீர் கழிப்பதில் அல்லது மற்ற செயல்பாடுகளில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல், ஆனால் வயிறு கனத்த உணர்வு மட்டும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடித்தால் கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.
கருப்பையில் நீர்க்கட்டிகள் பெரிதாக வளரும்போது, கருப்பைக்கு பின், சரியாக கருப்பை வாய் அருகே வளர்ந்து இருந்தால் உறவின் போது வலி தோன்றலாம்.
உங்கள் இடுப்பு பகுதியில் அதிக இடமில்லாத காரணத்தால், கட்டி வளர்ந்து பெரிதாகும்போது, இடுப்பில் கட்டி இருக்கும் இடத்தைப் பொறுத்து முதுகு அல்லது கால் வலி உண்டாகலாம்.