10 மணிநேரமாக அதிகரிக்கவுள்ள மின்வெட்டு நேரம்

இதற்கிடையில், தற்போதைய மின்வெட்டு ஒரு நாளைக்கு 6 ½ மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக நீட்டிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

10 மணிநேரமாக அதிகரிக்கவுள்ள மின்வெட்டு நேரம்

எரிபொருள் பற்றாக்குறையால் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி இன்றிலிருந்து  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தற்போதைய மின்வெட்டு ஒரு நாளைக்கு 6 ½ மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக நீட்டிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த வாரம் முதல் 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் மற்றும் நீர் மின் நிலையங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.