கிழக்கு மாகாண இறைச்சி கடைகள் ஒரு வாரத்திற்கு பூட்டு

கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம்  வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண இறைச்சி கடைகள் ஒரு வாரத்திற்கு பூட்டு

மட்டக்களப்பு அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் (கோழிக் கடைகள்) தவிர இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம்  வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் குளிர் காலநிலை காரணமாக பல இடங்களில் பெரும் எண்ணிக்கையிலான கால்நடைகள் உயிரிழந்தமை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.