மேஷ ராசியில் 3 கிரக சேர்க்கையால் உருவாகும் திரிகிரஹி யோகம்... எந்த ராசிக்கு மோசமா இருக்கும்?

ஏற்கனவே 2022 ஏப்ரல் 08 ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு சென்றுள்ளார். தற்போது 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி ராகுவும் மேஷ ராசிக்கு சென்றுள்ளார். அடுத்து 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்லவிருக்கிறார்.

மேஷ ராசியில் 3 கிரக சேர்க்கையால் உருவாகும் திரிகிரஹி யோகம்... எந்த ராசிக்கு மோசமா இருக்கும்?

ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது, அதனால் ஒவ்வொருவருக்கும் நல்லதோ, கெட்டதோ நடக்கும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

ஏனெனில் இந்த மாதத்தில் அனைத்து கிரகங்களுமே ராசியை மாற்றுகின்றன. குறிப்பாக 3 கிரகங்கள் ஒரே ராசியில் சேர்ந்து பயணிக்கின்றன. அதாவது ராகு, புதன் மற்றும் சூரியன் ஆகிய மூன்று கிரகங்கள் மேஷ ராசியில் சேர்ந்திருக்கும். இந்த முன்று கிரகங்களும் சேரும் போது, அது திரிகிரஹி யோகத்தை உருவாக்குகிறது.

ஏற்கனவே 2022 ஏப்ரல் 08 ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு சென்றுள்ளார். தற்போது 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி ராகுவும் மேஷ ராசிக்கு சென்றுள்ளார். அடுத்து 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்லவிருக்கிறார்.

இதனால் மேஷ ராசியில் திரிகிரஹி யோகத்தை உருவாக்கி, பல மோசமான சூழ்நிலைகளை உருவாக்கும் என ஜோதிடர்கள் கூறுகிறார்கள். இப்போது இந்த கிரகங்களின் சேர்க்கை எந்த ராசிக்கு அதிக தீங்கை விளைவிக்கும், அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

புதன்-ராகு சேர்க்கை

2022 ஏப்ரல் 12 ஆம் தேதி ராகு மேஷ ராசிக்கு சென்றார். ஏற்கனவே இந்த ராசியில் புதன் பயணித்து வருகிறார். புதனும், ராகுவும் இணைந்தால் மந்தநிலை உருவாகும். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையும் ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 25 வரை மட்டுமே என்றாலும், இது மேஷ ராசிக்காரர்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். ஆகவே இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்களின் பேச்சில் கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சொந்தக்காரர்களின் மனதில் வஞ்சகப் போக்கு வரலாம்.


சூரியன்-ராகு சேர்க்கை

மேஷ ராசியில் 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த ராசியில் ஏற்கனவே புதன் மற்றும் ராகு இணைந்துள்ளனர். மேஷத்தில், சூரியனும் புதனும் சேர்ந்து புதாதித்ய யோகத்தை உருவாக்கும், இது ஒரு நல்ல யோகமாக கருதப்படுகிறது. ஆனால் மேஷத்தில் ராகு இருப்பது புதாதித்ய யோகத்தின் நல்ல பலனைத் தரும். ஜோதிடத்தின் படி, சூரியனும், ராகுவும் ஒரே ராசியில் இருந்தால், அது கிரகண யோகத்தை உண்டாக்கும். ஆகவே 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி நிகழ்கிறது. சூரியன் ரிஷப ராசிக்கு செல்லும் போது, இந்த கிரகணம் முடிவடையும்.

எந்த ராசி கவனமாக இருக்கணும்?

புதன், ராகு, சூரியன் ஆகிய 3 கிரகங்களும் மேஷ ராசியில் இணைந்திருக்கும் போது, மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும். கிரகண யோகத்தின் போது மேஷ ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் திரிகிரஹி யோகம் உருவாவதால், பல சவாலகளை சந்திக்க நேரிடும். அதோடு இந்த ராசிக்காரர்கள் 2022 மே14 ஆம் தேதி வரை கவனமாக இருக்க அறிவுறுத்தப்டுகிறது. எந்த வேலையிலும் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்.

திரிகிரஹி யோகத்தின் தீய விளைவுகளைத் தவிர்ப்பதற்கான பரிகாரங்கள்:

ஜோதிடத்தின் படி, மேஷ ராசியில் உருவாகும் அசுப யோகங்கள் மற்றும் கிரகணங்களால் சந்திக்கும் அசுப பலன்களைத் தவிர்க்க சில பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்கள் பின்வருமாறு:

* புதன் பகவானை சந்தோஷப்படுத்த, புதன் கிழமை அன்று விநாயகருக்கு லட்டு வாங்கி கொடுத்து வணங்குங்கள்.

* புதன்கிழமைகளில் பசுவிற்கு தீவணம் கொடுங்கள்.

* சூரிய பகவானை மகிழ்விக்க, தினமும் சூரியனுக்கு நீரை வழங்குங்கள்.

* தினமும் குறைந்தது 108 முறையாவது சூரிய பகவானின் மந்திரங்களை சொல்ல வேண்டும்.

* முடிந்தால், சூரிய கிரக சாந்தி பூஜை செய்யுங்கள்.

* ராகுவை குளிர்விக்க, ராகு கிரக சாந்தி வழிபாடு செய்வது நல்லது.

* நவகிரக சாந்தி பூஜை செய்யலாம்.

* ஸ்ரீ ஆதித்ய ஹிருதய் ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்வதும் நல்லது.