ஒரே 'கிளிக்'கில் நத்தார்! ‘டயலொக்’ கின் ‘டிஜிட்டல் நத்தார் வலயம்’ அறிமுகம்
குளிர்கால 'வொண்டர்லேண்டை' மனக்கண்முன் கொண்டுவரும் வகையில் களிப்பூட்டல்மிக்க 3 D ஊடாடும் 'மெய்நிகர் வொண்டர்லேண்ட்' (டயலொக் டிஜிட்டல் நத்தார் வலயம்) கடந்த டிசம்பர் 20 ஆம் திகதியன்று டயலொக் கேட்போர் கூடத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பண்டிகையை கொண்டாடுவது போலவே பாதுகாப்பாகவும் இருக்க வேண்டிய காலபருவம் இது! கொவிட் -19 இன் மத்தியில் மற்றொரு நத்தார் தினத்தை கொண்டாடுவதற்கு உலகம் தயாராகி வருகின்ற வேளையில், டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி யின் அர்ப்பணிப்புமிக்க குழுவினர் 'இந்த டயலொக் நத்தார் வலயத்தை ' அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம் நத்தார் பண்டிகை நாதம் எங்கிலும் உற்சாகமாக ஒலிக்கின்றது.
அதற்கமைய, குளிர்கால 'வொண்டர்லேண்டை' மனக்கண்முன் கொண்டுவரும் வகையில் களிப்பூட்டல்மிக்க 3 D ஊடாடும் 'மெய்நிகர் வொண்டர்லேண்ட்' (டயலொக் டிஜிட்டல் நத்தார் வலயம்) கடந்த டிசம்பர் 20 ஆம் திகதியன்று டயலொக் கேட்போர் கூடத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இசைத்தம்பதியரான ரூகான்த்த குணதிலக்க மற்றும் சந்திரலேகா பெரேரா உட்பட நுகேகொடை புனித.ஜோசப் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை லக்வின் சில்வா மற்றும் டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி யின் பிரதம தொழிநுட்ப குழும அதிகாரி பிரதீப் டி. அல்மேதா ஆகியோரால் மேற்படி 3 D மெய்நிகர் 'டயலொக் டிஜிட்டல் நத்தார் வலயம்' ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த இனிய 'வொண்டர்லேண்ட்' அனுபவத்தை பார்வையிடுவதற்கு டிசம்பர் 31, 2021 வரை இதற்குரித்தான இணைய வெளியை Christmas.dialog.lk வழியாக அணுகலாம்.
காலமாற்றங்களின் மத்தியிலும் நத்தார் தினமானது மகிழ்ச்சியையும் உன்னதத்தன்மையும் ஏற்படுத்தவல்லது. அத்தகைய உன்னதத் தன்மையை உயர்த்தும் ஒரே நோக்கத்துடன், இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனர்களாகிய டயலொக், நாடு பூராவுமுள்ள இலங்கையர்கள் தத்தமது வீடுகளில் இருந்தவாறே பாதுகாப்புடன் இணைய தளம் வழியாக நத்தார் தினத்தை கொண்டாடுவதற்கு ஈடுபாட்டுடன் கூடிய புதியதோர் அனுபவத்தை இதனூடே வழங்கியுள்ளது.
ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் பிரவேசிக்கக்கூடிய இந்த 'டயலொக் டிஜிட்டல் நத்தார் வலயம் ' முழு குடும்பமும் பங்கேற்கக்கூடிய வகையிலான பலவிதமான நிகழ்வுகளை கொண்டுவருகின்றது. நத்தார் தாத்தாவிற்கு கடிதம் எழுதுதல் (பார்வையாளர்கள் தமது நத்தார் வாழ்த்துப் பட்டியலை நத்தார் தாத்தாவிற்கு அனுப்பலாம், அத்துடன் தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்கள் கவர்ச்சிகரமான பரிசுகளை வெற்றி கொள்ளும் வாய்ப்பும் உள்ளது) மற்றும் ரூகான்த்த குணதிலக்க மற்றும் அவரது குடும்பத்தினரின் நத்தார் பாடல்களை கேட்கும் வாய்ப்பு, நத்தார் 'கரோக்கி' பாடல் பாடும் வாய்ப்பு (பார்வையாளர்கள் தமது சொந்த படைப்பிலான நத்தார் பாடல்களை பாடவும் பதிவு செய்யவும் முடியும்), அத்துடன் 'நத்தலே அசிரிய ' தொடரைப் பார்க்கும் வாய்ப்பு (நத்தாரின் தோற்றம் மற்றும் நத்தாருடன் தொடர்புடைய சமய சம்பிரதாய பழக்க வழக்கங்களைக் காட்டும் 10 சிறுகதைகள்), நத்தார் 'மினி-கேம்ஸ்'களை விளையாடுவதன் மூலம் பரிசுகளை வெல்லும் வாய்ப்பு மற்றும் டயலொக்கின் அற்புதமான பருவகால சலுகைகளை அனுபவிக்கும் வாய்ப்பு ஆகியன இதனூடே கிட்டுகின்றன.
‘டயலொக் டிஜிட்டல் நத்தார் வலயம்' ஆரம்பித்து வைக்கப்பட்டதையொட்டி நுகேகொடை புனித ஜோசப் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை. லக்மின் சில்வா அவர்கள் கருத்து தெரிவிக்கையில், "டயலொக் டிஜிட்டல் நத்தார் வலயத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், அத்துடன் இந்த டயலொக் டிஜிட்டல் நத்தார் வலயத்தை அறிமுகப்படுத்துவதில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இந்த முயற்சிகளுக்கு உயிரூட்டும் பொருட்டு டயலொக் தனது ஆதரவை வழங்கியுள்ளமைக்காக எனது நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன்.
சீர்குலைந்துள்ள இன்றைய சூழ்நிலையில் உங்கள் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள புதிய அனுபவங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். நவீனத்துவம்மிக்க புதுமைகள் மிகுந்த இந்த இணையத் தளத்தின் மூலம் விழாக்களில் கலந்து கொள்ளவும், விழாக்கால பருவங்களைப் பற்றி தெரிந்து கொள்ளச் செய்யவும், நத்தார் விழா தொடர்பாக தெளிவுபடுத்தல்களை வழங்கவும், அன்பிற்குரியோருடன் இந்த விழாவை கொண்டாடவும் மக்களை ஊக்குவிக்க நான் ஆர்வமாக உள்ளேன் " என்றார்.
"பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு வகையான நிகழ்வுகளை கொண்டிருப்பதால், டயலொக் டிஜிட்டல் நத்தார் வலயத்தின் வடிவத்தில் ஓர் அற்புதமான, புதுமையான படைப்பை டயலொக் வழங்கியுள்ளது" என்று மூத்த பாடகர் ரூகான்த்த குணதிலக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த செயற்பாடானது நாட்டிற்கு தனித்துவம்மிக்கதாகும், மேலும் இன்றைய நிச்சயமற்ற சூழ்நிலையிலும் மக்களின் மனோநிலையில் முன்னேற்றத்தையும் , ஆறுதலையும் வழங்கக்கூடிய இந்த முயற்சியை முன்னெடுத்து அனைத்து இலங்கையர்களுக்கும் உயிர்ப்பூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள டயலொக் நிறுவனத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்." என்றார்.
மேற்படி 'டிஜிட்டல் நத்தார் வலயத்தை' பார்வையிட Christmas.dialog.lk என்ற இணைய தளத்திற்கு இலவசமாக பிரவேசிக்க முடியும். இந்த இணையவாயில் 2021 டிசம்பர் 31 ஆம் திகதி வரை மக்களுக்காக திறந்திருக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW |