2022-ல் 2 முறை ராசியை மாற்றும் சனியால், இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட போகுது...

2022 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டு. ஏனெனில் இந்த ஆண்டில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜோதிடத்தின் படி நவகிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகம்.

2022-ல் 2 முறை ராசியை மாற்றும் சனியால், இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட போகுது...

2022 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டு. ஏனெனில் இந்த ஆண்டில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. ஜோதிடத்தின் படி நவகிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டில் ஒருமுறை கூட ராசியை மாற்றாத சனி பகவான், 2022 ஆம் ஆண்டில் இரண்டு முறை ராசியை மாற்றப் போகிறார்.

2022 இல் சனியின் ராசி மாற்றம்

2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். ஆனால் 2022 ஜூன் 05 ஆம் தேதி முதல் கும்ப ராசியில் இருந்து பின்னோக்கி நகர்ந்து மகர ராசிக்கு சென்று, அந்த மகர ராசியில் 2023 ஜனவரி 17 ஆம் தேதி வரை இருந்து, பின் மீண்டும் கும்ப ராசிக்கு வருவார். 

நீதிமான் என்று அழைக்கப்படும் மற்றும் நவகிரகங்களில் முக்கியமான கிரகமான சனி, ஒரு ஆண்டில் இரண்டு முறை ராசியை மாற்றுவது நிச்சயம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் அவற்றில் 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை எதிர்பாராத வகையில் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம் - 2022 இல் சனி பகவானின் ராசி மாற்றங்களால், மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான காலமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைக் காண்பார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறுவார்கள். நல்ல மரியாதை கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணியிடத்தில் உறவுகள் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம் - 2022 ஆம் ஆண்டில் சனி பகவானின் ராசி மாற்றங்களால், 2022 ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு பிறகு ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். கடின உழைப்பிற்கான முழு பலனையும் பெறுவார்கள். விரும்பிய வேலைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் உறவு சிறப்பாக இருக்கும். சனி பகவானால் நிறைய பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாகவும், சாதகமாகவும் இருக்கும்.

தனுசு - 2022 இல் சனி பகவானால் தனுசு ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். நிதி நிலைமை நன்கு வலுவாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரரிகளுக்கு, இந்த காலம் மிகவும் பயனுள்ளதாகவும், சாதகமானதாகவும் இருக்கும்.

மகரம் - சனி பகவானை அதிபதியாக கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரம் இக்காலத்தில் நன்றாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றையும் பெறும் வாய்ப்பு நிறைய உள்ளது. அதே வேளையில், வியாபாரிகளுக்கு இது நல்ல லாபகரமான காலமாக இருக்கும். பல பெரிய புதிய ஒப்பந்தங்களைப் பெற வாய்ப்புள்ளது.