கனேடாவில் கடும் சரிவை சந்தித்த வீடு விற்பனை

கனேடாவின் ரொறன்ரோவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரியில் குடியிருப்புகளின் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சுமார் 44.6% அளவுக்கு வீடு விற்பனை சரிவடைந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மொத்தம் விற்பனையான குடியிருப்புகளின் எண்ணிக்கை 3,100 என தெரியவந்துள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கையானது 5,594 என இருந்தது. சராசரி விற்பனை விலை 16.4 சதவீதம் குறைந்து $1.04 மில்லியனாக இருந்தது.

மேலும், கனடா வங்கி கடந்த வாரம் கால் சதவீத புள்ளியில் வட்டி விகித உயர்வை அறிவித்தது, அதன் முக்கிய விகிதத்தை 4.5 சதவீதமாக கொண்டு வந்தது.

அத்துடன் வட்டி விகிதத்தை அதிகரிப்பதை தற்போதைக்கு நிறுத்தி வைப்பதாகவும் சூசகமாக தெரிவித்திருந்தது.

இது சந்தையில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், மக்கள் வீடு வாங்கும் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.