அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றது  இதொகா 

கொட்டகலை சி.எல்.எஃப் வளாகத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றது  இதொகா 

ராஜபக்ஷக்களுடனான உறவினை முறித்துக்கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை சி.எல்.எஃப் வளாகத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையும் கலந்துகொண்டிருந்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் கட்சியின் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோரும் இதன்போது பங்கேற்றிருந்தனர்.

அங்கு உரையாற்றிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தொடர்ச்சியான பல தவறுகளை ராஜபக்ஷக்கள் இழைத்து வருவதால், அவர்களுடனான உறவினை முறித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW