சுற்றுலா பயணிகளுடன் கவிழ்ந்த படகு: பலர் மாயம்

பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சுற்றுலா பயணிகளுடன் கவிழ்ந்த படகு: பலர் மாயம்

பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இத்தாலிக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான எல்லையில் உள்ள மேகியோர் ஏரியில் தொடர்புடைய படகு கவிழ்ந்தது என தெரியவந்துள்ளது. 

சம்பவத்தின் போது படகில் இருந்த 25 பேரில், பெரும்பான்மையானவர்கள் லிசான்சா மற்றும் பிக்கலுகா நகரங்களுக்கு இடையே நீந்தி கரைக்கு சென்றுள்ளதாகவும் எஞ்சியவர்கள் சில படகுகளால் மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மூவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், 15 பேர்களுக்கு சம்பவயிடத்திலேயே முதலுதவிகள் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, படகு விபத்து தொடர்பில் தகவல் வெளியானதும், 7 ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் ஒன்று மற்றும் 118 மருத்துவ வாகனங்கள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளது.

விபத்து நடந்த ஏரியில், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இத்தாலியின் இரண்டாவது பெரிய ஏரியான மாகியோர் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு பிரபலமான இடமாகும்.

இந்த நிலையில் திடீரென்று சூறாவளி ஏற்பட்டதில் பிரித்தானிய சுற்றுலா பயணிகளுடன் படகு கவிழ்ந்து, இதில் ஒருவர் இறந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.  

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW