முகச்சுருக்கமா... இதை மட்டும் செய்யுங்கள்!

மைசூர் பருப்பு 2 ஸ்பூன், பச்சரிசி 2 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் எடுத்து மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

முகச்சுருக்கமா... இதை மட்டும் செய்யுங்கள்!

பொதுவாக சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை கூடுதல் கவனத்தோடு பராமரித்தால் சரிசெய்துவிடலாம். ஆனால் மிருதுத்தன்மை குறைந்து சுருக்கம் உண்டாகிவிட்டால் உடனடியாக பராமரிப்பு தேவை.

இல்லையென்றால் வயது கூடும்போது உண்டாகும் சரும சுருக்கம் இளவயதிலேயே உண்டாகி விரைவில் மூப்பு தோற்றத்தை உண்டாக்கும்.

எனவே இவற்றை ஆரம்பத்திலே போக்க இயற்கை வழிகள் பல உள்ளன. தற்போது அதில் அசத்தலான டிப்ஸ் ஒன்றை பார்ப்போம்.

தேவையானவை

மைசூர் பருப்பு – 2 ஸ்பூன்

பச்சரிசி – 2 ஸ்பூன்

தயிர் – 1 ஸ்பூன்

தக்காளி விழுது – 1 ஸ்பூன்

கஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன்

செய்முறை

மைசூர் பருப்பு 2 ஸ்பூன், பச்சரிசி 2 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் எடுத்து மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தப் பொடியை தேவையான அளவு அதாவது 2 ஸ்பூன் சிறிய பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். இதோடு தயிர் – 1 ஸ்பூன், அரைத்த தக்காளி விழுது – 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து விழுதாக கலந்து இதை உங்களுடைய முகத்தில் கீழ்ப் பக்கத்தில் இருந்து மேல்பக்கம் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.

கழுத்திலிருந்து பேஸ் மாஸ்க் போட வேண்டும். பத்து நிமிடம் கழித்து உங்களுடைய தோல் இறுக்கி பிடிக்கத் தொடங்கும். அதன் பின்பு கையில் லேசாக தண்ணீரைத் தொட்டு உங்களுடைய முகத்தில் லேசாக மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி வந்தால், முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் இதை செய்து வந்தாலே வயதான தோற்றம் தள்ளிப் போகும். முகத்தில் சுருக்கம் வந்தவர்கள் இதை பயன்படுத்தினால் படிப்படியாக முகச்சுருக்கம் குறையும்.

முகத்தில் சுருக்கம் இல்லாதவர்கள் இளமையாக இருக்கும்போதே இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் வரக்கூடிய சுருக்கம் தள்ளிப்போகும். முயற்சி செய்து பாருங்கள்.    

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். JOIN NOW