பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிப்பு

இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை திடீரென நிராகரித்த துணை சபாநாயகர், அதனை சட்டவிரோதமானது என அறிவித்தார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிப்பு

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிராகரிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்த நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை திடீரென நிராகரித்த துணை சபாநாயகர், அதனை சட்டவிரோதமானது என அறிவித்தார்.

இதனை அடுத்து, பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்தும், 3 மாதங்களில் தேர்தலை நடத்தவும் அதிபர் ஆரிஃப் அல்வி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு, நாடாளுமன்ற கலைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளனர்.