மாமனார் வீட்டில் கொடுமை அனுபவித்த சமந்தா! ஆண் நண்பரால் வெளியான தகவல்

நடிகை சமந்தாவின் நெருக்கிய ஆண் நண்பர் ஒருவர் அவர் சந்தித்த பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

மாமனார் வீட்டில் கொடுமை அனுபவித்த சமந்தா! ஆண் நண்பரால் வெளியான தகவல்

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா சில வருடங்களுக்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் கருத்து வேறுபாட்டு காரணமாக விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

விவாகரத்து அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களின் விவாகரத்து அறிவிப்பு இன்றும் பேசு பொருளாக இருந்து வருகிறது.

நடிகை சமந்தாவிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார். அவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது சமந்தா விவகாரத்து குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகை சமந்தாவின் நெருக்கிய ஆண் நண்பர் ஒருவர் அவர் சந்தித்த பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

சமந்தாவின் விவாகரத்துக்கு பின் அவரின் ஆண் நண்பர் ப்ரீதம் என்பவர் ஒரு பதிவை இன்ஸ்டாகிராம் பக்கதில் வெளியிட்டு இருந்தார்.

அந்த பதிவில் தங்கள் குடும்ப ஆண்களின் உண்மையான குணத்தை மறைக்க கூடியவர்கள் அவர்கள். அவர்கள் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணமானவர்கள் வன்முறை என்பது மனதளவில் சித்ரவதை செய்வது மற்றும் விமர்சனம் செய்வது என ப்ரீத்தம் தனது இன்ஸ்டாகிராமில் எழுதியிருந்தார்.

இவரின் இந்த பதிவால் நடிகை சமந்தா தனது மாமனார் வீட்டில் மன ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.