9 வயது முதல் 21 வயது வரை பாலியல் கொடுமை அனுபவித்த இளம்பெண்
9 வயது சிறுமியாக இருந்தபோது குழந்தை இல்லாத தனது தாய்மாமன் தேசப்பன் என்பவனுக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு தேசப்பன் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

சென்னையில் இளம்பெண் ஒருவரை அவருடைய 9 வயது தொடங்கி 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவத்தில் முக்கிய சந்தேக நபராக கருதப்படும் அவரது தாய்மாமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
9 வயது சிறுமியாக இருந்தபோது குழந்தை இல்லாத தனது தாய்மாமன் தேசப்பன் என்பவனுக்குத் தத்துக் கொடுக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு தேசப்பன் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
அவரிடமிருந்து தப்பி காப்பகத்தில் தஞ்சமடைந்த அந்தப் பெண்ணை மீண்டும் அழைத்து வந்து கூட்டாளிகளுடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார் தேசப்பன்.
தேசப்பனின் இந்த செயலுக்கு அவனது மனைவியும் இளம்பெண்ணின் தாயும் உடந்தையாக இருந்ததுதான் பொலிஸாரை அதிர வைத்தது.
பெங்களூருவிலுள்ள தனியார் காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு அங்கும் பாலியல் கொடுமை அரங்கேறிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் உட்பட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தேசப்பனையும் அவனது கூட்டாளியையும் கேரளாவில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.