இந்தியாபெட்டிக்கடைவிசேட செய்திகள்

9ஆவது மகனுக்கு பொம்மையோடு திருமணம் செய்து வைத்த தந்தை

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவருக்கு பொம்மையோடு விநோதமான முறையில் நடந்த திருமணம் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 80 வயது மதிக்கத் தக்க ஷிவ் மோகன் என்பவருக்கு 9 மகன்கள் இருக்கின்றனர்.

இவர்களில் 8 மகன்களுக்கு பெண் பார்த்து முறைப்படி ஷிவ் மோகன், திருமணம் செய்து வைத்துள்ளார். அந்த 8 பேரும் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், “நான் உயிரோடு இருக்கும்போதே என் கடைசி மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்” என்று தனது விருப்பத்தைத் தனது மற்ற மகன்களிடமும், ஊர் பெரியவர்களிடம் ஷிவ் மோகன் கூறியுள்ளார்.

ஆனால், மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் அளவுக்கு தன்னிடம் எந்த வசதியும் இல்லாததாலும், மகன் அறிவாளி இல்லை என்பதால், வித்தியாசமாக யோசித்த ஷிவ் மோகன், ஒரு பொம்மையை மணமகள் போல் மிக அழகாக அலங்கரித்து, அழைத்து வந்தனர்.

அப்போது, மணமகள் போல் அலங்கரிக்கப்பட்ட பொம்மைக்கு ஷிவ் மோகனின் கடைசி மகன் தாலி கட்டினார்.

இந்த திருமணத்தில் ஷிவ் மோகனின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close