சம்பிக்கவின், அனுருத்த பாதெனிய

8 இந்திய மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறை

இந்திய மீனவர்கள் எட்டு பேருக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர்களை கடற்படையினர் கைது செய்து மீன்பிடி திணைக்களத்தினரிடம் ஒப்படைத்திருந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று (12) திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் மீன்பிடி திணைக்களத்தினால் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்திய மீனவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஏ. எம். எம். முபாரீஸ் மீனவர்கள் சார்பில் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்து எட்டு மீனவர்களுக்கும் 12 மாத கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு அச்சிறை தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீனவர்கள் எட்டு பேரையும் மிரிஹான தடுப்பு முகாமிற்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறும் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம் எச் எம் ஹம்ஸா சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் கொழும்பு தமிழ் மொபைல்ஆப்! இங்க கிளிக் செய்யுங்கள்.

Total
2
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article
ரஞ்சன் ராமநாயக்க

ரஞ்சனின் குரல்பதிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்க நடவடிக்கை

Next Article
அக்கரப்பத்தனை எல்பியன்

அக்கரப்பத்தனை எல்பியன் ஆற்றை அகலப்படுத்தும் நடவடிக்கை

Related Posts
கொரோனா தொற்றாளர்கள்
Read More

நாட்டில் இறுதியாக பதிவான தொற்றாளர்கள் பற்றிய விவரம்

நாட்டில் நேற்று (30) மேலும் 507பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு, தொற்றுக்குள்ளவர்களில் 496 பேர் பேலியகொட…
கொரோனா
Read More

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் இருவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில்…
பசில் ராஜபக்ஷ
Read More

திவிநெகும வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை

திவிநெகும மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) விடுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்…
Read More

மஹர சிறைச்சாலையில் பதற்றம்: 6 கைதிகள் பலி; 58 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று (29) மாலை ஏற்பட்ட பதட்ட நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் பரவியிருந்த தீ…
Total
2
Share