நாட்டின் சில பகுதிகளில் நிலவும் அசாதாரமான நிலையை கட்டிபாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அவசரகால சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கலவரங்களை கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு தேவையான அதிகாரங்களை வழங்குவதற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் 7 வருடங்களின் பின்னர் தற்போதுதான் அவசரகால சட்டம் அமுல்ப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.