நாட்டை விட்டு வெளியறே முயன்ற 67 பேர் கைது

திருகோணமலை சல்லி சாம்பல்தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த தரப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டை விட்டு வெளியறே முயன்ற 67 பேர் கைது

கடல்மார்க்கமாக நாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் வெளியேற முற்பட்ட 67 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை சல்லி சாம்பல்தீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த தரப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி சிறுவர்கள் மூவர், 7 பெண்கள் உள்ளடங்கலாக 67 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.