Thu, Jan28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

397 ஆண்டுகளுக்கு பிறகு நிகழவுள்ள அதிசயம்! இன்று மாலை வெறுங்கண்ணால் பார்க்கலாம்

சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும், சனியும் இன்று மாலை 5.45 மணிக்கு மேல் ஒன்றாக காட்சியளிக்கிறது. 397 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த அதிசய நிகழ்வை வெறுங்கண்ணால் பார்க்கலாம்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பிர்லா கோளரங்க இயக்குநர் எஸ்.சவுந்தரராஜன், “பூமியை ஒத்த கிரகம் என கருதப்படும் செவ்வாய்க்கோள், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 31ம் திகதி பூமிக்கு மிக அருகில் வந்தது.

அதேபோல் வியாழன் மற்றும் சனி கோள்கள் இன்று பூமிக்கு அருகில் வருகின்றன. வாயு பெருங்கோள்களான சனியும், வியாழனும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சியளித்து வருகின்றன. தற்போது இந்த 2 கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கி வந்துகொண்டே இருக்கின்றன.

குறிப்பாக இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு 5.45 மணிக்கு மேல், இவை இரண்டும் மேற்கு திசை வானத்தில் ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கின்றன. சனி, வியாழன் கோள்கள் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருகருகே நெருங்கிவரும்.

என்றாலும், இதேபோன்று ஒன்றாக காட்சியளித்தது கடந்த 1623-ம் ஆண்டு அதாவது 397 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து உள்ளது. தற்போதைய நிகழ்வுக்கு பிறகு மீண்டும் வருகிற 2080-ம் ஆண்டு மார்ச் 15ம் திகதிதான் வியாழன், சனி கோள்கள் ஒன்றாக தோன்றும்.

இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு மே 28ம் திகதி அவை அருகருகே வந்தன. ஆனால் அப்போது பகல் பொழுதில் சூரியன் அருகில் இருந்து காட்சியளித்ததால் நம்மால் அவற்றை பார்க்க முடியவில்லை.

தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு அவற்றை இன்று நாம் காணலாம். அடுத்து இந்த 2 கோள்களும் மிக நெருக்கமாக வரும் நிகழ்வு, 2040-ம் ஆண்டு அக்டோபர் 31ம் திகதியும், அதற்கு பிறகு 2060-ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதியும் நடக்க இருக்கின்றன” என்று கூறினார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்