கொரோனா தொற்றிலிருந்து மேலும் 356 பேர் குணமடைந்தனர் 

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 543,823 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 356 பேர் குணமடைந்தனர் 

இலங்கையின் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 356 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 543,823 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 757 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதன் மூலம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 569,928 ஆக உயர்வடைந்தது.

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் தற்சமயம் 11,572 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.