மரக்கறிகளால் பிரம்மாண்டமாக கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள நத்தார் மரம் 

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் சுமார் 30 அடி உயரமான மரக்கறி வகைகளிலான நத்தார் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.

மரக்கறிகளால் பிரம்மாண்டமாக கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள நத்தார் மரம் 

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் சுமார் 30 அடி உயரமான மரக்கறி வகைகளிலான நத்தார் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் வீட்டுத் தோட்டம் மற்றும் விவசாய செய்கையை பிரபல்யப்படுத்தும் நோக்கில் இந்த நத்தார் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நத்தார் மரத்தில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காய்கறி செடிகளைக் கொண்ட தொட்டிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மரக்கறி வகைகள், கீரை வகைகள், மிளகாய் உள்ளிட்ட பல வர்ண தாவரங்களினால் இந்த நத்தார் மரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த நத்தார் மரம் காட்சிப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்த மரக்கறி செடிகள் மக்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாகவும், பொரளை பகுதி பாடசாலை ஒன்றுக்கு ஒரு தொகுதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.