30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த மாஃபியா கும்பல் தலைவன் கைது..!

இத்தாலியில், 30 ஆண்டுகளாக காவல்துறைக்கு போக்கு காட்டிவந்த மாபியா கும்பல் தலைவன் பிடிபட்டான்.

30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த மாஃபியா கும்பல் தலைவன் கைது..!

இத்தாலியில், 30 ஆண்டுகளாக காவல்துறைக்கு போக்கு காட்டிவந்த மாபியா கும்பல் தலைவன் பிடிபட்டான்.

சிசிலி தீவில் இயங்கிவந்த மிகப்பெரிய மாபியா கும்பலின் தலைவன் மட்டேயோ மெசினா டினாரோ.

பல்வேறு நகரங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்தி 10 பேர் வரை கொலை செய்தது, அந்த வழக்கில் தனக்கு ஆயுள் தண்டனை கிடைக்க காரணமான அரசு வழக்கறிஞர்கள் 2 பேரை கொலை செய்தது போன்ற பல்வேறு குற்ற வழக்குகளால், இத்தாலி அரசாங்கத்தால் தேடப்பட்டுவந்த மிக முக்கிய குற்றவாளியாக மட்டேயோ அறிவிக்கப்பட்டான்.

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தபடியே இயக்கத்தினருக்கு கட்டளைகளை பிறப்பித்துவந்த மட்டேயோவை சிசிலி தீவில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.