Sun, Feb28, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

இதையும் படிங்க

3 சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு 2 சிறுமிகள் படுகொலை

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் 2 தலித் சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உன்னாவ் மாவட்டத்தில் அசோஹா காவல் நிலையத்தின் கீழ் உள்ள பாபுரா கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 3 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

அந்த 2 சிறுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட மற்றொரு சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இரண்டு சிறுமிகள் இறந்துவிட்டனர். மற்றொரு சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினரின் தெரிவித்துள்ளனர்.
இரண்டு சிறுமிகளும் விஷம் குடித்ததாக தெரிய வந்துள்ளது. இருப்பினும், மூன்று தலித் சிறுமிகள் உடல்களில் காயம் இருந்தது தெரியவந்துள்ளது.

உறவினர்களான 3 சிறுமிகளும் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்க வயலுக்கு சென்ற போது, அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 13, 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் ஆவர். உயிரிழந்த 2 சிறுமிகள் உள்பட 3 சிறுமிகளும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டறியும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, கொழும்பு தமிழ் Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் கொழும்பு தமிழ்:

கொழும்பு தமிழ் ஃபேஸ்புக்
கொழும்பு தமிழ் ட்விட்டர்
கொழும்பு தமிழ் இன்ஸ்டாகிராம்
கொழும்பு தமிழ் டெலிகிராம்
கொழும்பு தமிழ் யு டியூப்

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

x