3 பெண்களை ஏமாற்றி திருமணம்; கல்யாண மன்னனுக்கு வலைவீச்சு

அடுத்தடுத்து 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னனை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், செஞ்சியை அருகில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான வெங்கடேசனுக்கு, 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து அவரது மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது, அவரிடம் சண்டை போட்டுவிட்டு, வெங்கடேசன் தன் மனைவியைப் பிரிந்து சென்றுவிட்டார்.

தொடர்ந்து வேலைக்கு கோவை சென்ற வெங்கடேசன், வேலை செய்யும் இடத்தில் நந்தினி என்ற பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி, அவரையும் திருமணம் செய்துள்ளார்.

படித்துக்கொண்டே வேலைபார்த்து வந்த நந்தினியுடன், அவர் கடந்த 4 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

பின்னர், அவருடனும் தொடர்ந்து சண்டை போட்டு வந்த வெங்கடேசன், அவரிடமும் எதையும் சொல்லாமல் அவரை விட்டுப் பிரிந்து சென்னைக்கு சென்றுள்ளார்.

சென்னையில், தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகக் கூறி அந்த வெங்கடேசன், கோவிலம்பாக்கம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த அந்த காளீஸ்வரி என்ற செவிலியரை, தன் காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். பின்னர், அவரை 3 வதாக திருமணம் செய்துள்ளார்.

வெங்கடேசனின் செய்த இந்த 3 திருமணங்கள் பற்றிய தகவல்கள் எல்லாம், முதல் மனைவியான வெண்ணிலாவுக்குத் தெரியவரவே அவர் கடும் அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து, 3 வது மனைவியான காளீஸ்வரியின் அலைபேசி நம்பரை எப்படியோ பெற்றுக்கொண்டு, அவரை தொடர்பு கொண்ட வெண்ணிலா, வெங்கடேசன் பற்றிய எல்லா உண்மைகளையும் கூறியிருக்கிறார்.

காளீஸ்வரியோ, வெண்ணிலா கூறிய எதையும் நம்பாமல், “நான் வாழ்ந்தால் வெங்கடேசனுடன் தான் வாழ்வேன்” என்று பிடிவாதமாக கூறி, அவரிடம் தொடர்ந்து வாழ்ந்து வந்தார்.

இதனால், கடும் கோபமடைந்த வெண்ணிலா, செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள வெங்கடேசனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Article

தென் கொரிய மக்கள் மீது உளவியல் தாக்குதல் - வடகொரியா திட்டம்

Next Article
விசேட நாடாளுமன்ற அமர்வு

அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகிறது

Related Posts
Read More

விவசாயிகள் பேரணி : டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும்…
Read More

கொரோனா மருத்துவமனை தீ விபத்து; 3 டாக்டர்கள் கைது

குஜராத்தில் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் கடந்த 27ஆம் திகதி…
Read More

டிசம்பர் 3 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் சசிகலா? – உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் விடுதலை குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக…
Total
0
Share