Wed, May12, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

Latest Posts

3 ஆண்களை ஏமாற்றிய பெண் கர்ப்பமான நிலையில் கைது

ஐ.பி.எஸ். என்று கூறிக்கொண்டு 3 ஆண்களை ஏமாற்றிய பெண் ஒருவரை இந்திய பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.

ஆந்திராவைச் சேர்ந்த ஆஞ்சநேயலு என்பவர், டென்மார்க் நாட்டில் மென்பொருள் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் மேட்ரிமோனி மூலம் திருப்பதியை சேர்ந்த சொப்னா என்ற ஐபிஎஸ் அதிகாரியை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

விடுமுறை முடிந்ததும் டென்மார்க் வருமாறு ஆஞ்சநேயலு அழைத்தபோது, மனைவி சொப்னா மறுத்துவிட்டார். பின்னர் ஆஞ்சநேயலு மட்டும டென்மார்க் சென்று விட, சொப்னா தனது மாமனார், மாமியாருடன் ஹைதராபாத்தில் வசித்து வந்துள்ளார்.

இதனிடையே உங்கள் மகள் ஏமாற்றி விட்டதாகவும், தனக்கு இழப்பீடு தர வேண்டும் என வீட்டில் தகராறு செய்துள்ளார் சொப்னா. இதனால் மனவேதனை அடைந்த ஆஞ்சநேயலுவின் பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

அப்போது தான் சொப்னா குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் தொடங்கின. மேலும் பொலிஸார் நடத்திய விசாரணையில், சொப்னா ஐ.பி.எஸ் இல்லை என்பதும் அவரது உண்மையான பெயர் ரம்யா என்றும் தெரிய வந்தது.

அத்துடன், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்திவிராஜ். ஆத்மகூரை சேர்ந்த சுதாகர் என்பவரையும் வெவ்வேறு பெயர்களில் சொப்னா ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஐ.பி.எஸ். என்று கூறிக்கொண்டு 3 ஆண்களை ஏமாற்றிய சொப்னா, 3 மாதம் கர்ப்பமான நிலையில், பொலிஸார் கைது செய்தனர். அவரை காப்பகம் ஒன்றில் சேர்த்த பொலிஸார் வேறு யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil

Get all the Latest Sir Lanka Tamil News and Tamil World News at Colombo Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook. also Download Our News App in Google Play Store.

Latest Posts

சினிமா

x