இந்தியா

5 நாட்களாக 150 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தை உயிரிழப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் 150 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 2 வயது குழந்தை 4 நாட்கள் போராட்டத்திற்கு பின் இன்று அதிகாலை மீட்கப்பட்டபோதும், தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம் பகவான்புரா கிராமத்தில் பதேவீர் என்ற 2 வயது குழந்தை கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை போருக்குள் விழுந்துள்ளது.

இதையடுத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு பணிகளுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. இருப்பினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

குழந்தைக்கு தண்ணீர், உணவு ஏதும் அளிக்கப்படாத நிலையில் அவருக்கு ஆக்ஸிஜன் மட்டும் செலுத்தப்பட்டு வருவதாக மீட்பு பணி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய பேரிடர் மீட்பு படை, உள்ளூர் அதிகாரிகள், கிராம மக்கள் என ஏராளமானோர் குழந்தையை மீட்க போராடினர்.

5 நாட்கள் கடும் போராட்டத்திற்கு பின்னர், இன்று காலை 5.30 மணி அளவில், தேசிய பேரிடர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டது.

குழந்தை மீட்கப்பட்ட உடன் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டது.

சம்பவ இடத்திற்கு அருகிலே மாநில அரசின் ஹெலிகாப்டர் இருந்த போதிலும், 140 கி.மீ தொலைவில் உள்ள வைத்தியசாலைக்கு சாலை மூலமாகவே குழந்தையை அழைத்துச்சென்றுள்ளனர்.

குழந்தையின் உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் அமரேந்திர சிங், தேசிய பேரிடரின் மீட்பு பணிகள் குறித்து கண்காணித்து வருவதாகவும், மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இது போன்று திறந்து கிடக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்க அறிவுறுத்தியுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
x
Close
Close