கொள்ளுப்பிட்டி, காலி முகத்திடல் கலவரம் - 272 பேர் விளக்கமறியலில் தடுத்து வைப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். எ

கொள்ளுப்பிட்டி, காலி முகத்திடல் கலவரம் - 272 பேர் விளக்கமறியலில் தடுத்து வைப்பு

கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் கடந்த 09ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பாக இதுவரையில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். 

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இது தொடர்பாக 258 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 67 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 43 பேர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு குழுவினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். எவ்வாறாயினும், இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 206 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 272 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாகாணங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர்களின் மேற்பார்வையில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

அவர்கள் மீது சட்டவிரோத கூட்டம், தாக்குதல், காயப்படுத்தல், சொத்துக்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.