Mon, Jan18, 2021

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

‘தமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க இடமளிக்க முடியாது ‘

பிற சமூகங்களின் உரிமைகளை நாம் ஒருபோதும் தட்டிப்பறிக்ககூடாது. அதேபோன்று தமிழர்களின் உரிமைகளையும், உரியவற்றையும் பிறர் தட்டிப்பறிக்க இடமளிக்க முடியாது என, தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை உருவாக்கிய பெரும் பங்கு தமிழ் மக்களுக்கும் உள்ளது. அதன் காரணமாக அரசாங்கத்தின் அனைத்து வரப்பிரசாதங்களையும் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், கடந்த கால யுத்தத்தின்போது பல கொடுமைகளையும், பேரிழப்புகளையும் பெரும்பாலும் வடக்கு- கிழக்கு தமிழ் மக்களே சந்தித்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வட- கிழக்கு இணைந்த அரசியல் தீர்வு வரவேண்டும், சமஷ்டி ஆட்சி வரவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தே வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தீர்வு வரும் வரையில் காத்திருக்காமல் அபிவிருத்தியையும் வளப்பங்கீட்டையும் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கூறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 2 தொடர்பான சுவாரஸ்யமான செய்திகளை மிஸ் பண்ணாமல் தெரிஞ்சுக்கோங்க!

Website – www.colombotamil.lk 
Facebook – www.facebook.com/TheColomboTamil
Twitter – www.twitter.com/TheColomboTamil
Instagram – www.instagram.com/TheColomboTamil

#TamilNews, #SriLanka, #Colombo, #lka  #TamilSportsNews, #TamilCinemaNews, #BiggBossTamil

Latest news

Related news