Thu, Dec9, 2021

இதையும் படிங்க

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் திடீர் கைது

கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் இன்னொரு கிரிக்கெட் வீரர் குறித்து சாதி ரீதியான கருத்துகளை தெரிவித்ததையடுத்து வழக்கு நிலுவையில் இருந்தது, இதனையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவினால் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு சிறிது நேரம் சிறையில் வைக்கப்பட்டு பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஹன்சி நிடிகா காலவ்த் தொலைபேசியில் ஊடகங்களுக்கு கூறும்போது, “சட்ட ரீதியாக கைது செய்தோம், பிறகு ஹரியாணா மற்றும் பஞ்சாப் கோர்ட் உத்தரவுகளின் பேரில் அவரை பிணையில் விடுவித்தோம். சனிக்கிழமையன்று ஹன்சிக்கு யுவராஜ் வந்த போது கைது செய்தோம். சில மணி நேரங்களில் அவரை சொந்த பிணையில் விடுவித்தோம்” என்றார்.

இது தொடர்பான நீதிமன்ற உத்தரவு என்னவெனில் யுவராஜ் சிங்கை கைது செய்தாலும் சில மணி நேரங்களில் அவரை உறுதிப்பத்திரம் பெற்றுக்கொண்டு பிணையில் விடுவிக்க வேண்டும் என்பதே. வழக்கறிஞர் ரஜத் கல்சான் என்பவர்தான் யுவராஜ் மீது இந்த வழக்கை எஸ்.சி/எஸ்டி அடக்குமுறை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தார்.

“அதாவது யுவராஜ் சிங்கின் கருத்து தலித் சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டது.” என்று வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார், ஆனால் இதனையடுத்தே யுவராஜ் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில், “நான் என் நண்பர்களுடன் உரையாடிய போது நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டேன். இது தேவையற்றது. ஆனால் ஒரு பொறுப்புள்ள இந்தியனாக என் கருத்துகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்” என்று மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்த விவகாரம் தேவையில்லாமல் ஊதிப்பெருக்கப்பட்டதாக அப்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சு எழுந்தது. இந்நிலையில் யுவராஜ் சிங் பணிமுறை நிமித்தமாக கைது செய்யப்பட்டு சொந்த பத்திரத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்