Thu, Oct21, 2021
Homeஇலங்கைசீமெந்து, கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டது

சீமெந்து, கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டது

இலங்கையில், சீமெந்து மற்றும் கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 50 கிலோகிராம் எடைகொண்ட சீமெந்து மூடையொன்றின் விலையை 93 ரூபாயினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதனையடுத்து, 50 கிலோகிராம் சீமெந்து மூடையின் விலை 1,098 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கோதுமை மாவின் விலையும் இன்று (11) காலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 10 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை ரூபாய் 1,257 ஆல் அதிகரிக்க லிட்ரோ காஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, புதிய விலை ரூ .2,750 ஆக இருக்கும். 5 கிலோ சிலிண்டரின் விலை ரூ .503 ஆல் அதிகரித்து ரூ .1,101 ஆக உயர்ந்துள்ளது.

2.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 231 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது, புதிய விலை 520 ரூபாய் என்று லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 984 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 2,840 ரூபாயாகும்.

5 கிலோ எரிவாயுவின் விலை 393 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,136 ரூபாயாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க