Thu, Oct21, 2021
Homeவிசேட செய்திகள்புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த சிஎஸ்கே

புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த சிஎஸ்கே

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 30 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், புள்ளி பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை அணி 8 ஆட்டங்களில் 2 தோல்வி 6 வெற்றி என 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் 8 ஆட்டங்களில் 2 தோல்வி, 6 வெற்றி என 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 4-வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்தில் உள்ளது.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க