Homeவிளையாட்டுஅமெரிக்க ஓபன் டென்னிஸ்; இறுதிப்போட்டிக்கு மெட்வதேவ் முன்னேறினார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இறுதிப்போட்டிக்கு மெட்வதேவ் முன்னேறினார்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் டேனில் மெட்வதேவ், தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள கனடா வீரர் பெலிக்ஸ் அஜெர் அலியாசிசை எதிர்கொண்டார்.

இதில் மெத்வதேவ் 6-4, 7-5, 6-2 என்ற கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் மெட்வதேவ் ஜோகோவிச் அல்லது ஸ்வரெவுடன் மோத உள்ளார்.