Homeஇலங்கைரூபாயின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி நிலையில்

ரூபாயின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி நிலையில்

இலங்கை ரூபாய்க்கான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 90 சதம், விற்பனை பெறுமதி 204 ரூபாய் 89 சதம் ஆக காணப்படுகின்றது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 276 ரூபாய் 81 சதம், விற்பனை பெறுமதி 288 ரூபாய் 36 சதம் ஆகும். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபாய் 58 சதம், விற்பனை பெறுமதி 244 ரூபாய் 43 சதம் ஆகும்.

அத்துடன், ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 82 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபாய் 90 சதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.