Homeஇந்தியாகுழந்தையை தாக்கி அலைபேசியில் வீடியோ எடுத்த தாய் கைது

குழந்தையை தாக்கி அலைபேசியில் வீடியோ எடுத்த தாய் கைது

செஞ்சி அருகே மணலப்பாடி மதுரா மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன் (வயது 37) இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த துளசி (22) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு கோகுல் (4), பிரதீப் (2) ஆகிய மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே துளசி தனது தாய் வீட்டில் 2ஆவது மகன் பிரதீப்புடன் இருந்து வருகிறார்.

இந்நிலையில், துளசி தனது மகன் பிரதீப்பை சரமாரியாக தாக்கி அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது. இதுகுறித்து சத்தியமங்கலம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், துளசியின் கணவர் வடிவழகன் அளித்த புகாரின் அடிப்படையில் துளசி மீது 4 பிரிவுகளில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து தனிப்படை பொலிஸார் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்திற்கு சென்று துளசியை இன்று கைது செய்துள்ளனர்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது கொழும்பு தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.