Thu, Oct21, 2021
Homeஇலங்கையாழில் காணிப் பிரச்சினையால் தந்தை உயிரிழப்பு; மகள் படுகாயம்

யாழில் காணிப் பிரச்சினையால் தந்தை உயிரிழப்பு; மகள் படுகாயம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் வசிக்கும் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருக்கும் அவரது அயல் வீட்டுக்காரருக்கும் கடந்த மூன்று மாதங்களாக காணிப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை அவருக்கும் அவரது அயல் வீட்டுக்காரர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதில் குறித்த நபரும் அவரது மகளும் காயமடைந்த நிலையில், சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அயல் வீட்டில் உள்ளவர்களின் முச்சக்கர வண்டி மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

எனினும் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் அவர் மரணமடைந்துள்ளார். இதனையடுத்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மகள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது கொழும்பு தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க