Thu, Oct21, 2021
Homeசினிமாபிக் பாஸ் சீசன் 5ல் இந்த டிக் டாக் பிரபலமா? விஜய் டிவி கொடுத்த க்ளு

பிக் பாஸ் சீசன் 5ல் இந்த டிக் டாக் பிரபலமா? விஜய் டிவி கொடுத்த க்ளு

இந்தியாவில் உருவெடுத்த கொரோனா 2ம் அலையால் பிக்பாஸ் சீசன் – 5 கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தாமதமாக ஆரம்பமாக உள்ளது.

வரும் அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகலாம் என சின்னத்திரை வட்டாரங்கள் கூறி வரும் நிலையில் சீசன் – 5யும் உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.

இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது என்றும், இந்த ஷோ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சில போட்டியாளர்களின் தேர்வு உறுதியாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்ற செய்தியும், லிஸ்டும் வெளிவந்த வண்ணம் உள்ளன.பிக் பாஸ் சீசன் 5ல் இந்த டிக் டாக் பிரபலமா? விஜய் டிவி கொடுத்த க்ளு

இந்த நிலையில், விஜய் டிவி அதன் இன்ஸ்டா பக்கத்தில் “வணக்கம் நண்பர்களே” என பதிவிட்டுள்ளது. இதை பார்த்த நமது நெட்டிசன்கள், ஒரு வேளை டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து என்ட்ரி கொடுக்க உள்ளாரா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க