Homeஇலங்கை4 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது

4 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் நேற்று (02) மாத்திரம் 422,454 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

203,515 பேருக்கு சைனோபாம் முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், 18,483 பேருக்கு சைனோபாம் இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 22,981 பேருக்கு அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசியும், 174,985 அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, 2,490 பேருக்கு நேற்றைய தினம் மொடர்னா முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.