Homeஇலங்கைபேயோட்ட வந்த மந்திரவாதியால் இரண்டு பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்

பேயோட்ட வந்த மந்திரவாதியால் இரண்டு பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம்

ஹாலி​எல போகொட பிரதேசத்திலுள்ள வீட்டுக்கு பேயோட்ட வந்த மந்திரவாதி இளம் யுவதி உட்பட இரண்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதான பெண்ணும் 19 வயதான யுவதியுமே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.​​

மந்திரவாதி , வீட்டிலிருந்த அனைத்து ஆண்களையும் முச்சந்திக்கு அனுப்பிவைத்து, தான் அழைக்கும் வரையிலும் வீட்டுக்கு திரும்பக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

அதன்பின்னர், பேயோட்டுவதாகக் கூறி, பெண்ணையும் யுவதியையும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மெதிரிகிரியவைச் சேர்ந்த 41 வயதான மந்திரவாதியை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.