Homeஜோதிடம்சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு அடிக்கப்போகும் எதிர்பாராத அதிர்ஷ்டம் என்ன?

சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு அடிக்கப்போகும் எதிர்பாராத அதிர்ஷ்டம் என்ன?

ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகி செல்வார். சூரியன் பெயர்ச்சியாகும் பொழுது தான் ஒவ்வொரு தமிழ் மாதமும் பிறக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:09 மணிக்கு சூரியன், மிதுன ராசியிலிருந்து, கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ஒரு மாத காலம் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரிய பகவானால் அதிர்ஷ்டம் பெற போகும் அந்த 4 ராசிகள் யார் என தெரிந்துகொள்வோம்.

கடகம் : கடக ராசிக்குப் பெயர்ச்சியாக இருக்கும் சூரிய பகவானால் உங்களுக்கு அதிர்ஷ்டக் காற்று வீசப் போகிறது. இதுவரை மந்த நிலையில் இருந்து வந்த தொழில் நிலை மாறும். எதிர்பாராத அளவிற்கு மாற்றங்கள் நிகழும். சுய லாபம் பெருகும் வாய்ப்புகள் உண்டு. தந்தை மகன் உறவு சிக்கல்கள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகார வர்க்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும். உங்களுக்கு இருந்து வந்த போட்டிகள் குறைந்து முன்னேற்றம் அதிகரிக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகள் கைகூடி வரும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொண்டால் பிரச்சனை வந்த வழியே சென்று விடும்.

துலாம் :துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியால் குடும்பத்திற்கு இடையே இருக்கும் குழப்பங்கள் நீங்கும். சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை நீடிக்கும். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்து எரிந்து வெற்றி காண்பீர்கள்.

சுயதொழிலில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் உறவு சிக்கல்கள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு தகுந்த சமயத்தில் கிடைக்கும். பொருளாதார ரீதியான ஏற்றம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சி உடல் நல பாதிப்புகளை நீக்கும். இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறி உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அளவிற்கு முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் காண்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனோதிடம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் குறையும். தன லாபம் பெற தனலட்சுமியை வழிபடுங்கள்.

மீனம் : மீன ராசியில் இருந்து ஐந்தாம் இடமான கடக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாக இருப்பதால் உங்களுடைய வார்த்தையில் சுத்தம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு.

மேலும், சுயதொழிலில் எதிர்பார்க்காத அளவிற்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள், பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அரசு வழி காரியங்கள் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் அதிக தொகையை ஈடுபடுத்தி பெரிய லாபத்தை காணலாம். விக்னங்களை தீர்க்கும் விக்னேஸ்வரரை வணங்கி வாருங்கள் நன்மைகள் நடக்கும்.